ராஜபாளையம், ஆக.22: ராஜபாளையம் பி.ஏ.சி. ராமசாமி ராஜா தொழில்நுட்ப கல்லூரியில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி ஆட்சி மன்ற குழு உறுப்பினர் என்.கே.ஸ்ரீ கண்டன் ராஜா தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) டாக்டர் கார்த்திகேயன் வரவேற்றார். ராஜபாளையம் சரக காவல் துணை கண்காணிப்பாளர் பசிணா பீவி கலந்து கொண்டு போதை பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கினார்.
தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார். கருத்தரங்க நிகழ்ச்சியில் ராம்கோ கல்வி குழுமங்களின் முதன்மை செயல் அதிகாரி கிரிதரன், டிரஸ்ட் பொது மேலாளர் கூடலிங்கம், ராம்கோ குழும கல்வி நிலையங்களின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கலந்து கொண்டனர். இதன் மூலம் கல்லூரியில் பயிலும் 1300 மாணவ, மாணவியர் பயன்பெற்றனர். நிகழ்ச்சி முடிவில் விரிவுரையாளர் டாக்டர் கார்த்திகேயன் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.