சாத்தூர், நவ. 21: சாத்தூர் அருகே வன்னிமடை பகுதியில் நேற்று முன்தினம் மாலை கருவேல மரக்கட்டைகளை ஏற்றி கொண்டு சரக்கு லாரி வந்து கொண்டிருந்தது. இந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின்கம்பத்தில் மோதியது. இதில் மின் கம்பம் பலத்த சேதமடைந்தது.
இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு கருதி மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. இதனால் வன்னிமடை, போத்திரெட்டிபட்டி பகுதிகளில் பல மணிநேரம் மின்விநியோகம் இல்லாததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். பின்னர் மின்கம்பத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று மீண்டும் மின் விநியோகம் செய்யப்பட்டது.


