சாத்தூர், ஆக. 21: சாத்தூரில் ஆசிரியையிடம் செயினை வழிப்பறி செய்த இருவருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சாத்தூர் எஸ்.ஆர்.நாயுடு நகரை சேர்ந்தவர் அன்னலட்சுமி (42). பள்ளியில் ஆசிரியை. கடந்த 21.12.2022ல் டூவீலரில் சென்ற இவரை வழிமறித்த இருவர் அன்னலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்க செயினை கத்தியை காட்டி மிரட்டி கையில் காயம் ஏற்படுத்தி பறித்து சென்றனர்.
இந்த சம்பம் தொடர்பாக சாத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்த வழிப்பறி செய்த சிவகாசி சாட்சியாபுரம் ஆசாரி காலனியை சேர்ந்த அழகுராஜா (26), மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா முண்டுவேலம்பட்டியை சேர்ந்த முத்துபாண்டி (29) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து நகையை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு சாத்தூர் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று நீதிபதி முத்து மகாராஜா வழிப்பறியில் ஈடுபட்ட அழகுராஜா, முத்துபாண்டி ஆகிய இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1000 அபாரதம் விதித்து தீர்பளித்தார்.