வத்திராயிருப்பு, ஆக. 21: வத்திராயிருப்பு-அழகாபுரி சாலையில் உள்ள தம்பிபட்டி பகுதியில் ராஜபாண்டி என்பவர் பழைய இரும்பு கடை வைத்துள்ளார். நேற்று திடீரென அந்த இரும்பு கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து ராஜபாண்டி வத்திராயிருப்பு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலை அலுவலர் சுந்தர்ராஜன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய குழுவினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை முற்றிலும் அணைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.