விருதுநகர், ஆக.20: விருதுநகர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக மின் ஊழியர் மத்திய அமைப்பின் திட்டத் தலைவர் கனகராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மின்வாரியத்தின் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தால் மின்வாரிய கணக்கீட்டு பிரிவு, வருவாய் பிரிவுகளை ஒழித்து கட்டி, கணக்கீட்டு பபணியாளர், களப்பணியாளர்களை உபரி பணியாளராக்கி 25 ஆயிரம் பணியிடங்களை ஒழித்து கட்ட அரசு முடிவு செய்துள்ளது.
இதனால் இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகும். மின்பகிர்மானங்களை தனியாருக்கு தாரைவார்த்து மின் கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டுமென கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.