விருதுநகர், நவ. 19: அஞ்சலகத்தில் ஆயுள் காப்பீடு உள்ளிட்டவைகளுக்கு பாலிசி துவங்கி குறிப்பிட்டு தொகையை செலுத்தாமல் வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் செலுத்த டிச.31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக விருதுநகர் முதுநிலை அஞ்சள் கோட்ட கண்காணிப்பாளர் சுப்பிரமணியம் பாண்டியன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: அஞ்சல் துறை மூலம் பொதுமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகமான முதலீட்டு வாய்ப்பாக ஆயுள் காப்பீடு (Postal Life Insurance PLI) (Rural Postal Life Insurance RPLI) சேவைகள் நீண்டகாலமாக சிறப்பாக வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பல்வேறு சூழல் காரணமாக பாலிசி துவங்கிய வாடிக்கையாளர்கள், தங்கள் தவணை தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த தவறி விடுகின்றனர். இதனால் அந்த பாலிசிகள் காலாவதியாகி விடுகின்றன. எனவே, தற்போது விருதுநகர் வாடிக்கையாளர்களுக்காக காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க 20.11.2025 முதல் 31.12.2025 சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் காலாவதியான பாலிசிகளை மீண்டும் புதுப்பிக்க முடியும். இதுகுறித்த தகவல்கள் மற்றும் பாலிசிகள் புதுப்பிக்க அந்தந்த பகுதிகளில் உள்ள அஞ்சலகங்களை வாடிக்கையாளர்கள் அணுகலாம். இவ்வாறு கூறினார்.


