ஸ்ரீவில்லிபுத்தூர், நவ. 19: ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தாலுகா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாநில நிர்வாக குழு உறுப்பினர் அர்ஜூனன் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில், ‘ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொடுக்கப்பட்ட இலவச வீட்டுமனைக்கான இடத்தை நில அளவீடு செய்து கொடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதில் சிபிஎம் நகர செயலாளர் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர் சசிகுமார், மாவட்ட குழு உறுப்பினர் ஜோதிலட்சுமி, செயற்குழு உறுப்பினர் முருகன், பெருமாள், ஒன்றிய குழு சந்தனம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


