விருதுநகர், செப்.19: விருதுநகர் தெப்பம் அருகே உள்ள குடோன் தெருவில் ரவீந்திரன் என்பவர் பேப்பர் மற்றும் விளம்பர நோட்டீஸ் விநியோகம் செய்யும் வேலை செய்து வருகிறார். நேற்று காலை குடும்பத்தினர் வீட்டை பூட்டி வெளியே சென்றிருந்தனர். அப்போது வீட்டில் ஏற்றி வைத்திருந்த விளக்கு கவிழ்ந்து தீ விபத்து ஏற்பட்டது.
பூட்டிய வீட்டிற்குள் இருந்து புகை தொடர்ந்து வருவதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியான தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் தீ விபத்தால் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.