விருதுநகர், அக்.18: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு தொடர் மருத்துவக் கல்வி நிகழ்ச்சி பொது அறுவை சிகிச்சை துறையினரால் நடத்தப்பட்டது. துறைத்தலைவர் அமலன் சங்கர் தொடங்கி வைத்தார். மருத்துவ கல்லூரி முதல்வர் ஜெய்சிங் தலைமை வகித்தார். மார்பக புற்றுநோயின் நவீன முன்பரிசோதனைகள் மற்றும் மார்பக புற்றுநோயின் தாக்கம் அதிகரிப்பது பற்றியும், அதை தடுக்கும் வழிமுறைகள் பற்றியும் நோயை எளிதில் சரி செய்யும் நவீன சிகிச்சை முறைகள் பற்றியும் நிகழ்ச்சியில் எடுத்துரைக்கப்பட்டது.
இறுதியாக போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு கேடயங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் அரவிந்த்பாபு, மதுரை மருத்துவக் கல்லூரியின் புற்றுநோய் துறையின் பேராசிரியர்கள் ரமேஷ், ராஜசேகரன், பொது அறுவை சிகிச்சை துறையின் பேராசிரியர்கள் கோகுல்நாத் பிரேம்சந், மலர்வண்ணன், மல்லிகா, ராணி மற்றும் உதவி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
