ராஜபாளையம், செப்.18: பெரியார் 147வது பிறந்தநாளை முன்னிட்டு மதிமுக செட்டியார்பட்டி பேரூர் கழகத்தின் சார்பில் மாவட்ட கழக செயலாளர் வேல்முருகன் தலைமையில், அவரது படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் மாநில சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் காதர் மைதீன், ராஜபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர், சேத்தூர் பேரூர் செயலாளர், அய்யனப்பன், செட்டியார்பட்டி பேரூர் துணை செயலாளர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை செட்டியார்பட்டி பேரூர் கழக செயலாளர் நாகராஜன் செய்திருந்தார்.