விருதுநகர், ஆக.18: சரக்கு வாங்கி தராத வெல்டரை கத்தியால் வெட்டிய வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். விருதுநகர் பாண்டியன்நகர் ஓடைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கணேசன்(26). வெல்டிங் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை வெல்டிங் பட்டறை முன்பு நின்றிருந்த கணேசனிடம், பைக்கில் வந்த ஓடைப்பட்டியை சேர்ந்த மருதுபாண்டி(26), அல்லம்பட்டியை சேர்ந்த கிருஷ்ணபாண்டி(21) இருவரும் மது வாங்கித்தரும்படி கேட்டுள்ளனர்.
காசு இல்லை என கூறிய கணேசனை திட்டியதோடு, கத்தியால் கை, தலையில் வெட்டி உள்ளனர். மது வாங்கி தரவில்லை என்றால் வெட்டி கொலை செய்து விடுவோம் என மிரட்டி விட்டு பைக்கில் தப்பினர். விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் கணேசன், ரூரல் போலீசில் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மருதுபாண்டி, கிருஷ்ணபாண்டி இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.