விருதுநகர், அக்.17: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி விருதுநகரில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தோணிராஜ் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. 23 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் புதிய ஓய்வூதியத்திட்டம் அமுல்படுத்தப்படவில்லை.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ராஜஸ்தான், ஜார்கண்ட், சட்டீஸ்கர், இமாச்சல்பிரதேச மாநிலங்கள் ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியுள்ளன. தமிழக அரசும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த கோரி கோஷம் எழுப்பி மறியலில் ஈடுபட்டனர். மறியல் செய்த 4 பெண்கள் உட்பட 34 பேரை சூலக்கரை போலீசார் கைது செய்தனர்.