ராஜபாளையம், அக். 16: ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் சார்பில், இளைஞர்களுக்கான பிரதமரின் விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் ராமகிருஷ்ணன் வரவேற்றார்.
மதுரை மண்டல ஆணையர் அழகிய மணவாளன் அமலாக்க அதிகாரிகள் சீனிவாசன், ஈஸ்வரன், சதீஸ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு திட்டத்தின் நோக்கம், சிறப்புகள் குறித்து பேசினர். சுயநிதி பிரிவு ஒருங்கிணைப்பாளர் ராமராஜ் முன்னிலை வகித்தார். நிறைவாக பேராசிரியர் ராம்ஜி நன்றி கூறினார். இளங்கலை மற்றும் முதுகலை மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். அலுவலர் விஷ்ணு சங்கர் நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை செய்திருந்தார்.