ராஜபாளையம், அக். 16: ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஸ்மைல் பவுண்டேஷன் இணைந்து உலக கை கழுவும் தினம் விழிப்புணர்வு பிரச்சார பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை சமுதாய ஒருங்கிணைப்பாளர் இமையவேணி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயச்சந்திரன் கை கழுவுதல் அவசியம் குறித்து விழிப்புணர்வு உரை ஆற்றினார்.
பின்னர் சமூக சுகாதார அலுவலர் ராஜ்குமார் விழிப்புணர்வு தலைமையில் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முடிவில் மாணவர்கள் கைகள் எப்படி கழுவ வேண்டும் என செயல்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது. ஏற்பாடுகளை செவிலியர் ரூபா, தினேஷ் ஆகியோர் செய்திருந்தனர். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் நன்றி கூறினார்.