Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பைக் விபத்தில் கண்டக்டர் பலி

சிவகாசி, செப். 15: சிவகாசி அருகே டூவீலரில் இருந்து கீழே விழுந்து அரசு பஸ் கண்டக்டர் உயிரிழந்தார். மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் சங்கிலிராஜ்(28). இவர் அரசு பஸ் கண்டக்டராக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று தனது உறவினரான ஜெயலட்சுமி(57) என்பவருடன் டூவீலரில் எரிச்சநத்தம்- அழகாபுரி சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத வகையில் நிலைதடுமாறி 2 பேரும் கீழே விழுந்தனர். இதில் காயமடைந்த 2 பேரும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் சங்கிலிராஜூக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.