Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நூறுநாள் வேலை திட்ட குறைகளை தெரிவிக்கலாம்

விருதுநகர், செப்.13: நூறுநாள் வேலை திட்ட புகார்களை குறைதீர்ப்பு அலுவலரிடம் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் கலெக்டர் சுகபுத்ரா வெளியிட்ட தகவல்: விருதுநகர் மாவட்டத்தில் நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்களிடம் இருந்து வரும் புகார்களை பெற்று உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்காக குறைதீர்ப்பு அலுவலராக ஜெயபிரகாஷ் கடந்த ஆக.6 முதல் பணியாற்றி வருகிறார். நூறுநாள் வேலை தொடர்பான புகார்களை பெற்று பிரச்சனை நடக்கும் இடத்திற்கே சென்று விசாரணை மேற்கொள்வார்.

பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் தொடர்பான பிரச்சனைகள், புகார்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்வார். நூறு நாள் வேலை திட்ட புகார்களை மனுக்களாக குறைதீர்ப்பாளர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, விருதுநகர் என்ற முகவரிக்கோ அல்லது mgnregsvnrombudsperson@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமோ அனுப்பலாம். மேலும் நூறு நாள் வேலை திட்ட குறைதீர்ப்பு அலுவலர் ஜெயபிரகாசை 8925811346 என்ற எண்ணிலும் தெடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.