சிவகாசி, செப்.13: சிவகாசி நேரு காலனியை சேர்ந்தவர் முருகேசன்(40). இவர் சிவகாசி மாநகராட்சியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று தனது உறவினர் காளிமுத்து என்பவரை பார்த்து விட்டு வருவதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறி விட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் முருகேசனும், காளிமுத்துவும் டூவீலரில் திருத்தங்கல் ரோட்டில் சென்றுள்ளனர்.
அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரியின் அருகில் சென்ற போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று இவர்கள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த இருவரும் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனைக்கு வரும் வழியில் முருகேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.