சிவகாசி, செப்.13: சிவகாசி அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். சிவகாசி அருகே கொங்கலாபுரம் பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்ததாக சித்துராஜபுரம் சங்கர் நகரை சேர்ந்த முத்துராஜ் மகன் தினேஷ்குமார்(22), சித்துராஜபுரம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த சுப்புராம் மகன் அருண்குமார்(23), திருநெல்வேலி மைப்பாறைப்பட்டியை சேர்ந்த வெங்கடராயலு மகன் ராமமூர்த்தி(43) ஆகியோர் மீது சிவகாசி விஏஓ செல்லசாமி புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
+
Advertisement