சிவகாசி, ஆக.13: சிவகாசியில் போலீசார் நடத்திய சோதனையில் கஞ்சா வியாபாரிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். சிவகாசி ராஜதுரை நகர் கருமன்கோயில் அருகே மாரனேரி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த ஐயப்பன் காலனி சேர்ந்த விக்னேஷ் குமார்(25) என்ற வாலிபரை கைது செய்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று சிவகாசி அருகே விஸ்வநத்தம் சாலை அண்ணாமலை நாடார் உண்ணாமலை அம்மாள் பள்ளி அருகே சிவகாசி டவுன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்த விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்கிற மக்கான்(25) என்ற வாலிபரை கைது செய்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். சிவகாசியில் ஒரே நாளில் மூன்று கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.