தேனியில் நகராட்சி அலுவலகம் முன்பாக நேற்று தமிழ்நாடு அனைத்து துறை அரசு ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் ராமமூர்த்தி மற்றும் கந்தசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 20 வயது முடிந்த ஓய்வூதியதாரர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
