ஏழாயிரம்பண்ணை, அக்.12:விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் சங்கரபாண்டிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு கட்டுரை போட்டி நடந்தது. ஏழாயிரம்பண்ணை தீயணைப்பு நிலையம் சார்பில் நடந்த இப்போட்டியில் ஏராளமான மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் மாரியப்பன் பரிசு வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து தீயணைப்பு கருவிகளை பயன்படுத்துவது குறித்தும், தீவிபத்துகளில் சிக்கியவர்களை மீட்பது குறித்தும் தீயணைப்பு வீரர்கள் மாணவர்களுக்கு ஒத்திகை பயிற்சி மூலம் விளக்கினர். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் கருப்பசாமி, பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், கலந்து கொண்டனர்.