ராஜபாளையம், செப்.12: தியாகி இமானுவேல்சேகரன் நினைவுதினத்ைதயொட்டி, ராஜபாளையம் மலையடிப்பட்டியில் அமைந்துள்ள அவரது சிலைக்கு ராஜபாளையம் தொகுதி திமுக சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன், நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.ராஜன், திமுக நகர செயலாளர் ராமமூர்த்தி, மணிகண்ட ராஜா, மகளிர் அணி சுமதி ராமமூர்த்தி, முன்னாள் கூட்டுறவு பண்டக சாலை தலைவர் பாஸ்கரன், நகர்மன்ற உறுப்பினர்கள், நகர கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement