காரியாபட்டி, செப்.12: மல்லாங்கிணறில் முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியன் பிறந்தநாள் விழா நாளை நடைபெறுகிறது. இதில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்கிறார். திமுக முன்னாள் அமைச்சரும், நிதியமைச்சர் தங்கம்தென்னரசுவின் தந்தையாருமான வே.தங்கப்பாண்டியன் பிறந்தநாள் விழா நாளை அனுசரிக்கப்படுகிறது.
இதை முன்னிட்டு மல்லாங்கிணறில் உள்ள அவரது நினைவிடத்தில் நிதியமைச்சர் தங்கம்தென்னரசு தலைமையில் திமுகவினர் மரியாதை செலுத்த உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை பிறந்தநாள் விழா குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். இதில், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என விழா குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.