மண்டபம்,செப்.12: உச்சிப்புளி ரயில்வே கேட் பகுதியில் ராமேஸ்வரம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் அருகே வாகனங்களில் செல்பவர்களுக்கு விபத்துகளை ஏற்படுத்தும் விதமாக வளர்ந்துள்ள கருவேலம் மரங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உச்சிப்புளி பகுதியில் அமைந்துள்ள ரயில்வே கேட்டுப் பகுதியில் இருந்து ராமேஸ்வரம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு பக்கமும் கருவேலம் மரங்கள் அதிகமாக வளர்ந்துள்ளது. இந்த மரங்களின் கிளைகள் சாலையின் கரையோரங்களில் செல்லும் இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்துக்களை ஏற்படுத்தி பொதுமக்களுக்கு உயிர் சேதங்களை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
ஆதலால் விபத்துகளை தடுப்பதற்கு தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் அருகே வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.