சிவகாசி, செப்.11: வெம்பக்கோட்டை அருகே அனுமதியின்றி மண் அள்ளியவர் கைது செய்யப்பட்டார். வெம்பக்கோட்டை அருகே நதிக்குடி கிராமத்தில் ஆற்று புறம்போக்கு பகுதியில் சிலர் சட்டவிரோதமாக மண் அள்ளுவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் நதிக்குடி விஏஓ முருகன் தலைமையில் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு உரிய அனுமதியின்றி ராஜபாளையம் முறம்பு பகுதியை சேர்ந்த பால்ராஜ்(50) என்பவர் மண் அள்ளும் வாகனத்தின் உதவியுடன் சட்ட விரோதமாக மண் அள்ளியது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் மண் அள்ளும் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.