சிவகாசி, செப்.11: சிவகாசி அருகே விஸ்வநத்தம் கணேசன் காலனியை சேர்ந்தவர் பிச்சை மகன் காளிராஜன்(40). இவர் வாஷிங்மிஷின் சர்வீஸ் செய்யும் தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று தனது டூவீலரை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தூங்க சென்றார். தொடர்ந்து நள்ளிரவில் காளிராஜன் டூவீலர் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இந்த தீப்பொறி அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவீலரிலும் விழுந்ததால் 2 டூவீலர்களும் தீப்பிடித்து எரிந்தன. இதனை கண்ட அப்பகுதி மக்கள் டூவீலர்கள் மீது தண்ணீர் ஊற்றி அணைத்தனர். சம்பவம் குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.