Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராஜபாளையம் சேத்தூரில் ரூ.6.66 கோடியில் திட்டப் பணிகள்: அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

ராஜபாளையம், ஆக.11: ராஜபாளையம் சேத்தூர் பேரூராட்சியில் ரூ.6.66 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். ராஜபாளையம் தொகுதியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு (2025-26) நிதி, கலைஞர் நகர்புற மேம்பாட்டுத்திட்டம் பொதுநிதி மூலம் ரூ.5.96 கோடி மதிப்பீட்டில் சேத்தூர் பேரூராட்சி பகுதியில் குளிர்சாதன வசதியுடன்கூடிய கூடிய திருமண மண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் மயூரநாத சுவாமி திருக்கோயில் முன்பு ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் தளம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில், மக்களுக்காக சிந்திக்கக்கூடியவர் தமிழ்நாடு முதலமைச்சர். அதனால் தான் உங்களுடன் ஸ்டாலின், நலன் காக்கும் ஸ்டாலின் என பொதுமக்கள் நேரடியாக பயன்பெறும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்றார். மேலும் அவர் பேசுகையில், சேத்தூர் பேரூராட்சியில் குளிர்சாதன வசதியுடன்கூடிய திருமண மண்டபம் அமைத்தல் என்ற சிறப்பு திட்டம் மூலம், இப்பகுதி விவசாய மற்றும் ஏழை எளிய பொதுமக்கள் தங்கள் வீட்டின் சுபநிகழ்ச்சிகளை சிறப்பாக கொண்டாட பயன் உள்ளதாக இருக்கும். சேத்தூர் திருமண மண்டபம் அமைக்க இடம் கையெகப்படுத்தும் பணி விரைந்து நடைபெற்று அதிக நிதியிலும் கட்டப்படவுள்ளது என்றார்.

இவ்விழாவில் தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமார், ராஜபாளையம் எம்எல்ஏ தங்கப்பாண்டியன், வாரிய துணைத்தலைவர் ராசாஅருண்மொழி, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மணிகண்டன், மாநில விளையாட்டு அணி துணை அமைப்பாளரும் முன்னாள் எம்பியுமான தனுஷ்.எம்.குமார், மாநில ஆதிதிராவிடர் அணி ராஜன், நகராட்சி சேர்மன் பவித்ராஷியாம், முன்னாள் ஒன்றிய சேர்மன் சிங்கராஜ், நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, சேத்தூர் சேர்மன் பாலசுப்பிரமணியன், பேரூர் கழக செயலாளர் சிங்கப்புலி அண்ணாவி, இளங்கோவன், துணை சேர்மன்கள் கல்பனா குழந்தைவேலு, காளிஸ்வரி, மாரிச்செல்வம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன், மாவட்ட மீனவரணி அமைப்பாளர், நவமணி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஆனந்த் கார்த்திக், முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் துரை கற்பகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.