அருப்புக்கோட்டை, ஆக.11: அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டி முனியசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் குமார்(40). சிஆர்பிஎப் தலைமை காவலர். இவரது மனைவி, குழந்தைகளுடன் ஆலடிபட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் குமார், விடுமுறையில் ஆத்திப்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு சென்ற போது, கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த 2 சவரன் தங்க நகை, வெள்ளி பொருட்கள் காணாமல் போயிருந்தது தெரிய வந்தது. இது குறித்து அவர், தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement