விருதுநகர், செப்.10: இமானுவேல் சேகரன் நினைவுதினத்தை முன்னிட்டு பரமக்குடி வழித்தடங்களில் உள்ள மது பார்களை நாளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. விருதுநகர் கலெக்டர் சுகபுத்ரா வெளியிட்ட தகவல் வருமாறு: விருதுநகர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வகையில் இமானுவேல் சேகரன் நினைவு தினமான நாளை ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு அஞ்சலி செலுத்த செல்லும் வழித்தடத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள், அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3 உரிமஸ்தலங்களில் உள்ள பார்களில் மது விற்பனை செய்ய கூடாது.
உத்தரவை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவன பணியாளர்கள், எப்எல் 1, 2,3 மதுபான ஸ்தலங்களின் உரிமதாரர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.