ஸ்ரீவில்லிபுத்தூர், செப்.9: ஸ்ரீவில்லிபுத்தூரில் வருகிற 13ம் தேதி வன விரிவாக்க மைய அலுவலகத்தில் விவசாயிகள் குறை கூட்டம் நடைபெறுகிறது. இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வன விரிவாக்க மைய அலுவலகத்தில் வரும் 13ம் தேதி காலை 11 மணியளவில், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் நடைபெறுகிறது.
இதில் மாவட்ட வனத்துறை அதிகாரி முருகன், உதவி வனத்துறை அதிகாரி ஞானப்பழம், ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை ரேஞ்சர் செல்லமணி ஆகியோர் பங்கேற்று விவசாயிகள் குறைகளை கேட்டு அறிந்து கொள்ளவுள்ளனர். எனவே இந்த கூட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அளவிலான விவசாயிகள் பங்கேற்று பயனடையுமாறு வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.