விருதுநகர், ஆக.9: விருதுநகர் மாவட்டத்தில் ஆக.15ம் தேதி 450 கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் கலெக்டர் சுகபுத்ரா வெளியிட்ட தகவல்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 கிராம ஊராட்சிகளில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆக.15ல் கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் கிராம நிர்வாக பொது செலவினம், கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகம் உறுதி செய்வது, நூறு நாள் வேலை திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் ஜீவன் திட்டம் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. ஆக.15 கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.