அருப்புக்கோட்டை, ஆக.9: அருப்புக்கோட்டை புளியம்பட்டி தனியார் பள்ளியில் இருந்து புளியம்பட்டி மேற்கு பகுதி புறவழிச்சாலை வரை 3 கிமீ தூரத்திற்கு உள்ள இருவழிச்சாலை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட உள்ளது. இதற்காக இடங்களை அளந்து சர்வே செய்யும் முதற்கட்ட பணி தற்போது துவங்கியுள்ளது. இந்த நான்கு வழிச்சாலை அமைக்கும் முதல் பணியாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நெடுஞ்சாலை துறையின் நிலங்களை சர்வே செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெடுஞ்சாலை துறை உதவி கோட்டபொறியாளர் முத்துச்சாமி, உதவி பொறியாளர் தினேஷ்குமார் ஆகியோர் மேற்பார்வையில் வருவாய் ஆய்வாளர் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் நிலங்களை சர்வே செய்து குறியீடு செய்து வருகின்றனர். மேலும் திருச்சுழி ரோடு தனியார் பெட்ரோல் பங்கில் இருந்து ராமலிங்கா மில் வரை 3 கிமீ தூரத்திற்கும் இருவழிச்சாலையை நான்குவழிச்சாலையாக மாற்றுவதற்கும் நிலம் சர்வே செய்யும் பணிகள் நடக்கிறது. சர்வே செய்யும் பணிகள் முடிவடைந்ததும் பணிகள் துவங்கும் என என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.