விருதுநகர், ஆக.9: விருதுநகர் வருகை தந்த எதிர்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு விருதுநகர் அதிமுக மேற்கு ஒன்றிய கழகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் எதிர்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். நேற்று விருதுநகர் தேசபந்து மைதானத்தில் பரப்புரை மேற்கொண்டார்.
விருதுநகர் வருகை தந்த அவருக்கு விருதுநகர் அதிமுக மேற்கு ஒன்றியம் சார்பில் மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை கி.கலாநிதி, கே.கே.கண்ணன், தடங்கம் சி.நாகராஜன், ஒண்டிப்புலி செல்வம், தாதம்பட்டி பாலமுருகன், ராஜேஸ்வரி, தாதபட்டி செந்தில், கணேசமூர்த்தி, செவல்பட்டி ராமசந்திரன், குருகணேஷ், மருளுத்து சங்கர், திலிப்குமார், அல்லம்பட்டி ஜெயபாண்டி, விஜயகாந்த், செவல்பட்டி தவசேகர், பாசறை சுரேஸ் தர்மலிங்கம், முகம்மதுநெய்னார், புதுப்பட்டி கருப்பசாமி ஆகியோர் செய்திருந்தனர்