ஸ்ரீவில்லிபுத்தூர், அக். 8: ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்குட்பட்ட 28, 29, 33 ஆகிய வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இம்முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து ெகாண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். தொடர்ந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் அந்தந்த துறை அலுவலர்களால் உடனுக்குடன் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டன.
பின்னர் சிலரது மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு அதற்கான சான்றிதழ்கள் பயனாளிகளிடம் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் தங்கம் ரவி கண்ணன், துணை தலைவர் செல்வமணி, திமுக நகர செயலாளரும், நகர மன்ற உறுப்பினருமான அய்யாவு பாண்டியன், நகராட்சி கமிஷனர் குமார், நகர்மன்ற உறுப்பினர்கள் மீரா, தனலட்சுமி முருகன், சுப்பையா மற்றும் நகராட்சி அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.