சிவகாசி, ஆக.8: சிவகாசி பஸ் ஸ்டாண்ட் அருகே புள்ளைக்குழியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் புதிய மாநகராட்சி அலுவலகம் மற்றும் வர்த்தக கடைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சிவகாசி -சாத்தூர் சாலை புள்ளைக்குழியில் 1.75 ஏக்கரில் 47 ஆயிரம் சதுர அடி பரப்பில் புதிய அலுவலக கட்டிட பணிகள் கடந்த 2023 ஜூனில் அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கின.
புதிய அலுவலக கட்டிட பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு, மேயர் சங்கீதா இன்பம் தொடங்கி வைத்தனர். இந்நிலையில், 2024 பிப்ரவரியில் கூடுதலாக ரூ.3 கோடியே 70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.