வத்திராயிருப்பு, நவ. 7: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு சுற்றுவட்டார பகுதிகளில் பிரதானமாக விவசாயமே நடைபெற்று வருகிறது. குறிப்பாக வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கூமாபட்டி, கான்சாபுரம், தம்பிபட்டி , மகாராஜபுரம், கோட்டையூர், இழந்தைகுளம், சுந்தரபாண்டியம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் விவசாயம் என்பது பிரதானமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது நெல் நடவு விவசாய பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். வத்திராயிருப்பு பகுதியில் சுமார் 6,200 ஏக்கரில் நெல் விவசாயம் செய்யப்பட்டுள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த நடவுப் பணிகள் இன்னும் அதிகரிக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நெல் விவசாய பணிகள் காரணமாக வத்திராயிருப்பு பகுதி பசுமையாக காட்சியளிக்கிறது.
