அருபபுக்கோட்டை, நவ. 7: அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி முதல் நிலை ஊராட்சி பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு குடிநீர் ஏற்றப்பட்டு அங்கிருந்து குழாய்கள் வழியாக வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக 32 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் பாளையம்பட்டியில் உள்ளது. இந்நிலையில், தற்போது அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப கூடுதலாக கட்டப்பட்ட 8 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் பகிர்மான குழாய்கள் பதிக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு பகிர்மான குழாய்கள் பதிக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். அப்போது பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் காமேஸ்வரி, முன்னாள் ஒன்றிய சேர்மன் சுப்பாராஜ், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சாகுல் கமீது,
ஒன்றிய திமுக செயலாளர்கள் பாலகணேசன், பொன்ராஜ், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் வேலுச்சாமி, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் கணேசன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பாலச்சந்தர், பொதுக்குழு உறுப்பினர் கொப்பையராஜ், மாவட்ட இலக்கிய அணி ஆசிரியர் மாணிக்கம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அழகு ராமனுஜம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
