சிவகாசி, நவ. 6: சிவகாசி அருகே பார் ஊழியரிடம் வழிப்பறி செய்த வாலிபர்களை கைது செய்யப்பட்டனர்.
சிவகாசி அருகே சாமிபுரம் காலனியை சேர்ந்தவர் வரதராஜ்(35). இவர் டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று வரதராஜ்லிங்கபுரம் காலனி பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மீனம்பட்டியை சேர்ந்த மதேஷ் மகன் சிவக்குமார்(27), செல்வராஜ் மகன் கலைசெல்வன்(27) ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர். இது குறித்து வரதராஜ் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சிவக்குமார், கலைசெல்வன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
