சிவகாசி, நவ.5: சிவகாசி பகுதியில் சரக்கு வாகனங்கள் சாலை விதியை மீறி, அளவுக்கு அதிகமாக பாரத்தை ஏற்றிக் கொண்டு செல்வது அதிகரித்து வருகிறது. இந்த வாகனங்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருவதோடு விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, சிவகாசி பகுதியில் பழைய பேப்பர் லோடுகள், தீப்பெட்டி பெட்டிகள் ஏற்றி செல்லும் மினி ஆட்டோக்கள் அளவிற்கு அதிகமாக பாரம் ஏற்றிக்கொண்டு திறந்தவெளியாகச் செல்வது தினந்தோறும் வாடிக்கையாகி விட்டது. எனவே, விதிமுறைகளை மீறி அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
