திருச்சுழி, டிச.2: திருச்சுழியில் பைக்கில் கட்டுவிரியன் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.திருச்சுழி அருகே நாடாகுளம் கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி பாண்டியன். இவர் தனது வீட்டிற்கு முன்பாக பைக்கை நிறுத்துவது வழக்கம். நேற்று திருச்சுழிக்கு பலசரக்கு வாங்குவதற்காக பைக்கில் சென்றார். பொருட்கள் வாங்கிய பின்பு பைக்கில் பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக திருச்சுழி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார். திருச்சுழி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலர் கண்ணன் (பொறுப்பு) தலைமையில் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் வாகனத்தில் புகுந்த சுமார் 2 அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பை லாவகமாக பிடித்து பத்திரமாக காட்டுப் பகுதியில் உயிருடன் கொண்டு போய்விட்டனர். வாகனத்தில் பாம்பு இருந்ததால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
+
Advertisement

