விருதுநகர், ஆக.2: விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது. ஆக.1 முதல் 7ம் தேதி வரை உலகம் முழுவதும் தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தாய்ப்பால் ஊட்டுவதற்கு முன்னுரிமை அளிப்போம், ஆதரவளிக்க நிலைத்த அமைப்புகளை உருவாக்குவோம் என்ற கருத்துருவின் அடிப்படையில் கடைப்பிடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் நலப் பிரிவில் தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் ஜெயசிங் தலைமை வகித்தார். பேராசிரியர் அரவிந்த்பாபு சிறப்புரை நிகழ்த்தினார். மருத்துவர் ராதிகா தொகுத்து வழங்கினார். மேலும் இதில் பேராசிரியர்கள் சங்கீத், உமாமகேஸ்வரி, மருத்துவர் அஜிதாபானு, தாய்மார்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.