விருதுநகர்: விருதுநகர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 கிராம ஊராட்சிகளில் அக்.2 காந்தி ஜெயந்தியன்று நடைபெற இருந்த கிராம சபைக்கூட்டம் நிர்வாகக் காரணங்களால் ஒத்தி வைக்கப்படுகிறது. ஒத்திவைக்கப்பட்ட கிராம சபைக்கூட்டம் அக்.11 அன்று நடைபெறும்.
கூட்டத்தில், கிராம மக்களின் 3 அத்தியாவசியமான தேவைகளை தேர்வு செய்து கிராமசபை ஒப்புதல் பெறுதல், சாதிப்பெயர்கள் கொண்ட குக்கிராமங்கள், சாலைகள் மற்றும் தெருக்களின் பெயரை மாற்றுதல் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல் (01.04.2025 முதல் 30.09.2025 முடிய),
கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், சபாசார் செயலி செயல்பாடுகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், இதர பொருட்கள் தொடர்பான கூட்டம் நடைபெற உள்ளது.