Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ெபாதுமக்களை தேடி சென்று தமிழ்நாடு அரசு சேவையாற்றுகிறது: தங்கப்பாண்டியன் எம்எல்ஏ பேச்சு

ராஜபாளையம், அக்.25: ராஜபாளையம் தொகுதி கணபதிசுந்தரநாச்சியார்புரம் மற்றும் சுந்தரராஜபுரம் ஊராட்சிகளை சேர்ந்த மக்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது. ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். பின்னர் பேசிய தங்கப்பாண்டியன் எம்எல்ஏ, ‘‘மக்களைத்தேடி தேடி தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு சேவையாற்றி வருகிறது. ஆகவே பொதுமக்கள் உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு முகாமை சிறப்பாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். அரசு அலுவலர்களும் பொதுமக்கள் அளிக்கும் மனுவை நிராகரிப்பு செய்யாமல் 100% மனுவின் கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும்.

இந்தியாவில், ஏன் உலகத்திலேயே எண்ணற்ற பொதுமக்கள் பயன்பெறும் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி காட்டியவர் தமிழ்நாடு முதலமைச்சர் மட்டுமே. இப்பருவ மழைக்காலத்தில் களத்தில் நின்று மக்களுக்கு சேவையாற்றி வருவது தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான சிறப்பான அரசு’’ என கூறினார்.இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் ராஜீவ்காந்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் உதயசங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஷ்வரன், மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி, கழக நிர்வாகிகள் கருணாகரன், லிங்கசாமி, கணேசன், அனந்தப்பன், சுருளி, கனகராஜ், சின்னகுருசாமி, செல்லச்சாமி, கிளர்க் வனராஜ், முத்துக்குமார், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.