ராஜபாளையம், செப்.16: ராஜபாளையம் தொகுதியில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு செட்டியார்பட்டியிலுள்ள ஒன்றிய கழக அலுவலகத்தில் அண்ணா படத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து, தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம் என்ற உறுதி மொழி ஏற்றார்.
இந்நிகழ்ச்சியில் செட்டியார்பட்டி பேரூர் செயலாளர் இளங்கோவன் மற்றும் ஒன்றிய பேரூர் நிர்வாகிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள அண்ணா சிலைக்கு ராஜபாளையம் தொகுதி திமுக சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நிர்வாகிகளுடன் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன், நகர் மன்ற தலைவர் பவித்ரா ஷியாம், திமுக நகரச் செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்ட ராஜா, நகர்மன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.