ராஜபாளையம், செப்.16: ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் பேருந்துகளில் ஆபத்தான பயணத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஈடுபடுகின்றனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் இருந்து நகரில் செயல்படும் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகள் பேருந்தில் வந்து செல்கின்றனர். பல பகுதிகளில் இருந்து அதிகாலை முதல் பல அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் கிராமப் பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் குறிப்பிட்ட நேரத்தில் ஒரே பேருந்தில் அனைவரும் பயணித்து வருவதால் கூட்டமாக காணப்படுகிறது. இதனால் மாணவர்கள் படியில் தொங்கியவாறு ஆபத்தான பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
+
Advertisement