ராஜபாளையம், அக்.14. ராஜபாளையத்தில் தண்டவாளத்தைக் கடக்கும் போது ரயிலில் அடிபட்டு கூலித் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
தென்காசி மாவட்டம் விஸ்வநாத பேரி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்(43). கூலி தொழிலாளி. இவர் ராஜபாளையத்தில் அண்ணாநகர் பகுதியில் உள்ள தனது தாயார் அய்யம்மாள் வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் அண்ணா நகர் பகுதியில், தண்டவாளத்தை கடக்க முயன்ற போது செங்கோட்டையிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் உடலைக் கைப்பற்றி அரசு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.