சிவகாசி, டிச.13: சிவகாசி 43வது வார்டு பகுதியில் ஒன்றிய அரசின் தொழில் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பெண்களுக்கான சுய வேலைவாய்ப்பு குறித்த கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. பயிற்சி நிறைவு பெற்றதை தொடர்ந்து தையல்கலை பயிற்சி, கை எம்ப்ராய்டரி, அழகு கலை, சணல் பை தயாரித்தல், கைவினைப் பொருட்கள் தயாரித்தல் போன்ற பயிற்சி வகுப்புகளில் பயின்ற பயனாளிகள் 80 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
+
Advertisement


