சிவகாசி, அக்.13: சிவகாசியில் உரிய அனுமதியின்றி தகர ஷெட்டில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி நியூ திருப்பதி நகரில் கிழக்கு சப்-இன்ஸ்பெக்டர் ரபியம்மாள் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு பட்டாசு கடையின் பின்புறம் உரிய அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், கடையின் உரிமையாளரான சிவகாசி முத்தமிழ்புரத்தை சேர்ந்த கணேசமூர்த்தி (49) என்பவரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகளின் மதிப்பு ரூ.24 ஆயிரம் என போலீசார் தெரிவித்தனர்.