சிவகாசி, அக்.13: சிவகாசி அருகே, வி.சொக்கலிங்காபுரம் கமலகண்ணன் (55) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இந்த ஆலையில் நேற்று முன்தினம் பட்டாசு உற்பத்தி பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டு அந்த அறையில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் அருகில் இருந்த அறையிலும் தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறிய நிலையில் 2 அறைகளும் சேதம் அடைந்தன. இந்த விபத்து குறித்து வி.சொக்கலிங்காபுரம் விஏஓ ராஜகுரு (41) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் ஆலையின் உரிமையாளர் கமலக்கண்ணன், போர்மென் முருகன் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement