வத்திராயிருப்பு, நவ.11: வத்திராயிருப்பில் உயர்மின் கோபுர விளக்கு மீண்டும் செயல்பட நடவடிக்க எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வத்திராயிருப்பில் உள்ள நாடார் பஜார் பகுதி காலை மற்றும் மாலை நேரங்களில் மிகவும் பரபரப்பாக காணப்படும். இந்த பஜார் வழியாக கான்சாபுரம், கூமாபட்டி பிளவக்கல் அணை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளுக்கு தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உயர் மின்கோபுரம் விளக்கானது கடந்த சில நாட்களாக எரியாமல் கிடக்கிறது. இதனால் பஜார் பகுதி போதிய வௌிச்சமின்றி கிடப்பதாக வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த உயர் மின் கோபுர விளக்கினை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்கள் கூறுகையில், முக்கிய பகுதியில் உள்ள உயர்மின்கோபுர விளக்கு பழுதடைந்து கிடப்பதால் போதிய வெளிச்சமின்றி வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே உயர்மின் கோபுர விளக்கு மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
+
Advertisement

